இலங்கை கிரிக்கெட் வீராங்கனைகளுக்கான கட்டணம் அதிகரிப்பு

2023 ஆம் ஆண்டு ஜனவரி 31 ஆம் திகதி நடைபெற்ற கூட்டத்தின் போது, 2023 ஆம் ஆண்டிற்கான தேசிய மகளிர் வீராங்கனைகளின் போட்டிக் கட்டணத்தை உயர்த்துவதற்கு இலங்கை கிரிக்கெட் நிர்வாகக் குழு தீர்மானம் எடுத்தது.

அதனடிப்படையில் white-ball கிரிக்கெட்டின் இரண்டு வடிவங்களுக்கான போட்டிக் கட்டணம் ஒரு போட்டிக்கு US$250 இல் இருந்து US$750 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அணியில் உள்ள ஒவ்வொரு ரிசர்வ் வீரரும் போட்டி கட்டணத்தில் 25 சதவீதம் பெறுவார்கள்.

மேலும், இருதரப்பு அல்லது சர்வதேச போட்டியாக இருந்தாலும், அணி வெல்லும் ஒவ்வொரு போட்டிக்கும், ஒவ்வொரு வீரருக்கும் 250 அமெரிக்க டொலர் வெற்றிக்கான பணக்கொடுப்பனவு கிடைக்கும்.

நாட்டில் பெண்கள் கிரிக்கெட்டை மேலும் மேம்படுத்துவதற்கும், பெண் கிரிக்கெட் வீரர்களை வலுப்படுத்துவதற்கும் இலங்கை கிரிக்கெட்டின் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த தீர்மானம் 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1 ஆம் திகதி முதல் அமலுக்கு வந்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.