பீட்டர் ராம்சௌர் ஜனாதிபதியை சந்தித்தார்

ஜேர்மன் பாராளுமன்ற உறுப்பினர் பீட்டர் ராம்சௌர் நேற்று ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்துள்ளார்.

ஜேர்மன் அரசாங்கத்தின் அனுசரணையுடன் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அமுல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பில் மீளாய்வு செய்யப்பட்டதுடன், எதிர்கால நடவடிக்கைகள் குறித்தும் இந்த சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டது.

இலங்கையின் எதிர்வரும் அபிவிருத்தி வேலைத்திட்டத்தில் ஜேர்மனியின் தொழில்நுட்ப உதவி மற்றும் முதலீட்டை எதிர்பார்ப்பதாக தெரிவித்த ஜனாதிபதி, இது தொடர்பில் மேலதிக உதவிகளை கோரியுள்ளார்.

மேலும், இந்நாட்டில் யானை மனித மோதலை நிர்வகிப்பதற்கு ஜேர்மனி அறிமுகப்படுத்தியுள்ள திட்டங்களுக்கு ஜனாதிபதி தனது நன்றியைத் தெரிவித்ததுடன், அவற்றை ஆராய்ந்து நாட்டில் நடைமுறைப்படுத்தியமைக்கு தனது பாராட்டுக்களையும் தெரிவித்தார்.

மேலும், ஜேர்மன் தொழில்நுட்பக் கல்லூரிகள் மூலம் இலங்கை மாணவர்களுக்கான பயிற்சித் திட்டங்களை மேலும் விரிவுபடுத்துவதற்கான ஆதரவை எதிர்பார்த்துள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகர் மற்றும் ஜனாதிபதி பணிமனையின் தலைவர் சாகல ரத்நாயக்க, நிலையான அபிவிருத்தி மற்றும் இளைஞர் விவகாரங்களுக்கான ஜனாதிபதி பணிப்பாளர் ரந்துல அபேவீர உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.