“ஐயோ சாமி நீ எனக்கு வேண்டாம்”யாழில் பாடல் மூலமாக அரசாங்கத்தை விமர்சித்தார் தயாசிறி.
சாவகச்சேரி
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர பாடல் மூலமாக அரசாங்கத்தை விமர்சித்திருந்தார்.

14/02 செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்ற சுதந்திரக் கட்சியின் வேட்பாளர் அறிமுக நிகழ்வில் விருந்தினராக கலந்துகொண்ட போதே அவர் “ஐயோ சாமி நீ எனக்கு வேணாம்;
பொய் பொய்யாய் சொல்லி ஏமாத்தினது போதும்” என்ற பாடலைப் பாடி அரசாங்கத்தினை விமர்சித்திருந்தார்.
அத்துடன் ” தோல்வி நிலையென நினைத்தால் மனிதன் வாழ்வை நினைக்கலாமா?
உரிமை இழந்தோம்;உடமையும் இழந்தோம்; உணர்வை இழக்கலாமா?” என்ற உணர்ச்சிப் பாடலையும் பாடி அசத்தியிருந்தார்.
தயாசிறி ஜயசேகர வழக்கமாக யாழ்ப்பாணம் வரும் போது தமிழ் மொழியில் பாடல்களைப் பாடுவதனை வழக்கமாகக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.












கருத்துக்களேதுமில்லை