பொலிஸ் பாதுகாப்பு இதுவரை கிடைக்கவில்லை – அரச அச்சகர்

வாக்குச்சீட்டுகளை அச்சிடுவதற்கான போதுமான பாதுகாப்பை பொலிஸார் இதுவரை வழங்கவில்லை என அரச அச்சகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் வாக்குச்சீட்டுகள் அச்சிடும் பணிகள் மேலும் தாமதமடையும் என அரச அச்சகர் கங்கா லியனகே குறிப்பிட்டுள்ளார்.

நேற்று(20) மாலை வரை பிரதான நுழைவாயிலுக்கான பாதுகாப்பிற்காக மாத்திரம் 02 பொலிஸ் உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டிருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

தேர்தலுக்கான வாக்குச்சீட்டு அச்சிடும் பணிகளின் பாதுகாப்பிற்காக 65 பொலிஸ் உத்தியோகத்தர்கள் தேவைப்படுவதாக அரச அச்சகர் தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பில் பல்வேறு சந்தர்ப்பங்களிலும் குறித்த பிரிவினரிடம் கோரிக்கை விடுத்ததாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்