கண்டி நகரை முழுமையாக அபிவிருத்தியடைந்த நகரமாக்குவதற்கு அமைச்சரவை அனுமதி

வரலாற்று சிறப்பு மிக்க கண்டி நகரத்தை முழுமையாக அபிவிருத்தியடைந்த நகரமாக்குவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அதனடிப்படையில், முன்வைக்கப்பட்டுள்ள யோசனைக்கு அமைய கட்டுகஸ்தோட்டை வரையான மத்திய அதிவேக நெடுஞ்சாலை திட்டத்தை துரிதமாக நிறைவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

கட்டுகஸ்தோட்டை, கண்டி மற்றும் குண்டசாலை உள்ளிட்ட பிரதேசங்களை மையமாகக் கொண்ட விசேட அபிவிருத்தி திட்டத்தை தயாரிப்பதற்காக நகர அபிவிருத்தி குழு, மாவட்டத்தை பிரதிநிதிதித்துவப்படுத்தும் அமைச்சர்கள், நகரத் திட்டமிடல் துறை நிபுணர்கள் அடங்கிய குழுவொன்றும் நியமிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்