பிரபாகரன் தொடர்பான கருத்துக்களை மறுக்க முடியாது – சிவாஜிலிங்கம்

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தொடர்பில் உலகத் தமிழர் பேரவையின் தலைவர் பழநெடுமாறன் கூறிய கருத்தினை தாம் மறுப்பதற்கில்லையென முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், உலகத் தமிழர் பேரவையின் தலைவர் பழ நெடுமாறன் வெளியிட்ட கருத்தை, தமிழகத்தில் உள்ள தேசிய கட்சிகளின் தலைவர்களான சீமான், வைகோ உள்ளிட்ட பலர் ஏற்க மறுத்துள்ளனர்.

பாரதீய ஜனதா கட்சி, திராவிட முன்னேற்ற கழகம் மற்றும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்பன இந்த விடயம் தொடர்பில் இதுவரை எந்தவித கருத்துக்களையும் வெளியிடவில்லை.

இந்தநிலையில் இலங்கை அரசாங்கம் இந்த கருத்தை முற்றாக மறுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.