எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றில் ஆர்ப்பாட்டம் – சபையில் அமைதியின்மை – ஒத்திவைக்கப்பட்டது அமர்வு!

இலங்கை நாடாளுமன்றத்தின் சபா பீடத்தில் எதிர்க்கட்சியினரால் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பட்டத்தால் இன்றைய நாடாளுமன்ற சபை அமர்வில் பெரும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை நடத்துமாறு கோரி, பதாதைகளை ஏந்தியவாறு, கோஷங்களை எழுப்பி சபை அமர்விற்கு எதிர்க்கட்சியினர் இடையூறு விளைவித்துள்ளனர்.

பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரன உரையாற்றிக்கொண்டிருந்த சமயம், ஆர்ப்பாட்டக்காரர்களின் கோஷங்கள் உக்கிரமடைந்துள்ளது.

 

 

இந்தநிலையில், அவர்கள் அக்கிராசனத்தையும் அண்மித்த நிலையில், சபாநாயகர் சபை நடவடிக்கையை நாளை காலை 9.30 மணி வரை ஒத்திவைத்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்