புத்தளவில் மீண்டும் நிலநடுக்கம்

புத்தள மற்றும் வெல்லவாய பகுதிகளில் மற்றுமொரு நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

இது 3.2 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாக புவியியல் மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.

இன்று முற்பகல் 11.44 மணியளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதகா அந்த பணியகம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், இந்த நிலநடுக்கம் குறித்து பொது மக்கள் அச்சப்பட தேவையில்லை என புவியியல் மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்