கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்துக்கு புதிய தலைவர், செயலாளர் தெரிவு

பாறுக் ஷிஹான்
சுமார் 40 வருடங்களுக்கு மேற்பட்ட வரலாற்றைக் கொண்ட கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தின் 2023/2024 ஆண்டுக்கான புதிய நிர்வாக சபையை தெரிவு செய்வதற்கான பொதுக்கூட்டம்   கல்முனை மாவட்ட நீதவான் நீதிமன்றக் கட்டடத் தொகுதியில் இன்று  நடைபெற்றது.
இவ் வருடாந்த பொதுக் கூட்டத்தின் போது நடப்பு வருடத்திற்கான நிர்வாகத் தெரிவு இடம்பெற்றதுடன்  கல்முனை சட்டத்தரணிகள் சங்கத் தலைவராக  சட்டத்தரணி  எம்.ஐ றயிசூல் ஹாதி ஏக மனதாகத் தெரிவு செய்யப்பட்டார்.
தொடர்ந்து செயலாளராக சட்டத்தரணி  ரோசன் அக்தரும்  பொருளாளராக சட்டத்தரணி பிறேம் நவாத் ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டனர்.அத்துடன் இதர பதவி நிலைகளுக்கும் ஏனைய நிருவாகிகளும் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்