வவுனியா மக்கள் என்ன சோம்பிகளா..? ஊடகவியலாளர் கேள்வி?

வவுனியாவில் யாழ் போதனா வைத்தியசாலையின் மருத்துவ கழிவுகளை வவுனியாவில் இனி எரிக்கப்படும் என யாழ் போதனா வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் வைத்தியர் யமுனானந்தா தெரிவித்துள்ள விடயம் இன்றைய பத்திரிகைகளில் காணக்கூடியதாக இருந்தது
இது தொடர்பாக வவுனியா மாவட்ட ஊடகவியலாளரான பரமேஸ்வரன் கார்த்தீபன் கடும் கண்டனம் ஒன்றை வெளியிட்டுள்ளார் குறித்த கண்டனத்தில் வவுனியா மக்களை சோம்பிகள் என்ற மனநிலையிலா நினைத்து செயல்படுகிறார்கள் என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளார்
மேலும் குறித்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது
வவுனியா என்றால் கழிவு மாவட்டம் என்றா நினைத்துள்ளீர்கள் முட்டாள்களே..!!!
இயக்கர் நாகர் காலத்திலும் அதற்கு முற்பட்ட காலத்திலும் தமிழரின் வரலாற்று பூமியடா வவுனியா (வன்னி)
வன்னியான் என்று மார்பு தட்டி கூறுவோம் நாங்கள்…
1995-1996-2009 வரையில் யுத்த காலத்தில் இடப்பெயர்வின் போது வந்தோரை வாழவைத்ததும் நாம் தான், யுத்தத்திலும் சரி, வீர மரணங்களிலும் சரி, ஏன்.. பெரும்பான்மை நம் இடங்களை கைப்பற்ற இடம் கொடுக்காமல் முகம் கொடுத்து சாதித்தவர்களும் வவுனியா(வன்னி) மக்கள் நாம் தான்…
உங்கள் மாவட்டதிலேயே கடல்வளம் , வனவளம் இருக்கும் போது கழிவுகளை வவுனியாவில் எரிப்பதற்கு என்ன காரணம்? அவற்றை யாழ் அல்லது பூநகரி பகுதிகளில் உள்ள கடல் பகுதிக்கு அண்மையாக எரித்தால் அந்த காற்று கடலுக்கு தானே சேரும் அதை செய்யமுடியாமல் இங்கு மக்கள் வாழும் பகுதிகளாகினும் சரி வேறு வனப்பகுதியாக இருந்தாலும் சரி, அவற்றின் புகை மண்டலம் வவுனியா மக்கள் சுவாசிக்கும் காற்றில் அல்லவா கலப்படம் ஆகப்போகின்றது? ஏன் இங்கு வாழும் மனிதர்கள் என்ன சோம்பிகள் என்ற நினைவிலா செயல்படுகிறீர்கள்
வவுனியா பிராந்திய சுகாதார பணிப்பாளர் அக்கூட்டத்தில் கலந்து கொண்டாரா..? அப்படி கலந்து கொண்டிருப்பின் அவர் ஏன் இதற்கு அனுமதி வழங்கினார், அப்படியெனில் எம் மாவட்ட மக்கள் மீது இவர் எவ்வாறான ஒரு மனநிலையில் உள்ளார் என்பதை மக்களே நீங்கள் முடிவெடுங்கள்
அதே சமயம் இந்நடவடிக்கையை தடுத்து நிறுத்த வவுனியாவில் உள்ள அனைத்து சிவில் சமூகங்களும், சமூக ஆர்வலர்களும் இதனை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க உடனடியாக முன்வாருங்கள்
“ஒன்று சேருவோம் ,எங்கள் மண் காட்போம்”
நன்றி
“வன்னியின் செல்வன்”
பரமேஸ்வரன் கார்த்தீபன் (ஊடகவியலாளர்)

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.