கைதடியில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த இருவர் கைது.

சாவகச்சேரி
தென்மராட்சி-கைதடிப் பகுதியில் சட்டவிரோதமாக அனுமதியின்றி மதுபானம் விற்பனை செய்த இருவர் சாவகச்சேரி மதுவரித் திணைக்களத்தினரால் 22/02 புதன்கிழமை காலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதடிப் பகுதியில் உள்ள வீடு ஒன்றிலும்-வர்த்தக நிலையம் ஒன்றிலும் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்யப்படுவதாக சாவகச்சேரி மதுவரித் திணைக்களத்திற்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில்;
சாவகச்சேரி மதுவரிப் பரிசோதகர் வே.ரஷிகரன் தலைமையிலான குழுவினர் குறித்த கைது நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தனர்.
இதன்போது இருவர் கைது செய்யப்பட்டிருப்பதுடன் -பெறுமதியான சாராயப் போத்தல்கள் மற்றும் பியர் ரின்கள் ஆகியனவும் கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்