தேர்தல் ஒத்திவைக்கப்படவில்லை. ஒத்தி வைக்க எந்தத் தேர்தலும் இல்லை.. ஜனாதிபதி தெரிவிப்பு!

பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதை முன்னுரிமையாக கொண்டு தான் செயற்படுவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க,

“இரண்டு பிரச்சினைகள் உள்ளன. ஒன்று, நாட்டுக்கு அரிசி வாங்குவதற்கு 20 பில்லியன் ஒதுக்கியுள்ளோம், அது 20 லட்சம் குடும்பங்களுக்கு ஒதுக்கப்பட்டது, இப்போது 28 லட்சம் குடும்பங்கள் உள்ளன. ஓய்வு பெற்றவர்களுக்கு பணிக்கொடை வழங்கவும் உள்ளது. அடுத்து இந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் வந்து என்னிடம் சொன்னார்கள். பரவலாக்கப்பட்ட நிதியில் இருந்து சிறுதொழில் செய்பவர்களுக்கு சிறிது பணம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதனை ஒதுக்கக் கூடாதா என்று சொல்லுங்கள், நான் அதை பரிசீலிக்கிறேன். சபை அதனை தீர்மானித்து கூறுங்கள். மற்றது நாங்கள் ஒரு முடிவை எடுத்துள்ளோம், குறிப்பாக கடன் தொடர்பாக பரிஸ் மாநாடு, இந்தியாவுடன் மற்றும் சீனாவுடன் ஒரு உடன்பாட்டை எட்டி சர்வதேச நாணய நிதியத்தினால் விசேடமாக இந்த முன்மொழிவுகள் குறித்து தீர்மானம் ஒன்று எமக்கு பெற்றுத் தரும் வரையில் இந்த பணத்தில் கை வைக்க முடியாது. திடீரென்று ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டால், திடீரென ஒரு மாதமேனும் நீடிக்கப்பட்டால் இந்த பிரச்சினையில் நாங்கள் பணத்தை இழப்போம், அவ்வளவுதான்.” “மேலும், தேர்தல் ஒத்திவைக்கப்படவில்லை. ஒத்தி வைக்க எந்தத் தேர்தலும் இல்லை.. ஆனால் ஒன்று சொல்வேன், நான் பொருளாதாரத்துக்கு முன்னுரிமை கொடுப்பேன்.. அதனை கட்டியெழுப்பாவிட்டால் நாடு இல்லை.. ஒரு கேள்வி கேட்கிறேன்.. அரசியல் சாசனத்தை அழித்து நாட்டை பாதுகாக்க முடியுமா? நாட்டைப் பாதுகாத்தால்தான் அரசியல் சாசனத்தைக் காக்க முடியும்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.