தேர்தலை நடத்தக் கோரி தேர்தல் ஆணைக்குழுவுக்கு பணம் அனுப்பிய யாழ்.இளைஞன்

தேர்தலை நடத்த நிதியில்லை என ஜனாதிபதி பாராளுமன்றில் கூறியுள்ள நிலையில் , தேர்தலை நடத்த தன்னால் முடிந்த நிதியுதவி என யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் காசுக்கட்டளை மூலம் 500 ரூபா பணத்தை தேர்தல் ஆணைக்குழுவுக்கு அனுப்பியுள்ளார்.


யாழ்ப்பாணம் சுண்டுக்குளியைச் சேர்ந்த குறித்த இளைஞன் , “தேர்தலை நடாத்தி ஜனநாயகத்தை நிலைநாட்டுவோம், சிறு துளி பெருவெள்ளம்” என தபால் நிலையம் ஊடாக 500 ரூபா காசுக்கட்டளையை தேர்தல் ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

இதேவேளை பாதுக்க பிரதேசத்தைச் சோ்ந்த வாக்காளர்கள் சிலர் இணைந்து அண்மையில் தோ்தல் ஆணைக்குழுவுக்கு பணம் அனுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்