ஆங்கிலேய பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த மீனவர் கைது!
இளம் ஆங்கிலேய பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படும் 38 வயதான மீனவர் ஒருவர் கிரிந்த காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த பெண் தனது பெற்றோருடன் கிரிந்தவிற்கு வந்து கொடனா சந்தியில் உள்ள விடுதியில் தங்கியுள்ளார். அந்த தங்குமிடத்திற்கு முன்னால் உள்ள சாலையில் தான் சென்று கொண்டிருந்த போது, நெடுஞ்சாலையில் பயணித்த நபர் ஒருவர் தன் அருகில் வந்து கட்டிப்பிடித்து வலுக்கட்டாயமாக முத்தமிட்டதாக அவர் காவல் நிலையத்தில் அளித்த முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
தன்னிடம் குறித்த நபர் தொடர்பான படம் அடங்கிய கைபேசியை கிரிந்த காவல்துறையினரிடம் ஒப்படைத்து இந்த முறைப்பாட்டை செய்துள்ளார்.
கையடக்கத் தொலைபேசியில் இருந்த புகைப்படங்கள் மூலம் விசாரணைகளை மேற்கொண்ட கிரிந்த காவல்துறை அதிகாரிகள் குழு, மாகம பிரதேசத்தில் வசிக்கும் மீனவர் என கூறப்படும் சந்தேக நபர் ஒருவரை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் திஸ்ஸமஹாராம நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.












கருத்துக்களேதுமில்லை