தொழிற்சங்க நிபுணர்களின் ஒன்றியத்தை சந்திக்கின்றார் ஜனாதிபதி!

புதிய வருமான வரி சட்டம் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு தொழிற்சங்க நிபுணர்களின் ஒன்றியத்தை நாளை(சனிக்கிழமை) சந்திக்க ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளார்.

தாங்கள் விடுத்து கோரிக்கைக்கு அமைய ஜனாதிபதி இதற்கு இணக்கம் தெரிவித்ததாகவும் நாளை இடம்பெறவுள்ள கலந்துரையாடல் வெற்றியளிக்காவிடின் எதிர்வரும் முதலாம் திகதிக்கு பின்னர் நாட்டிற்கு மிகத் தீர்மானிக்க காலமாக மாறுக்கூடும் எனவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடக பேச்சாளர் வைத்தியர் சமில விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் முதலாம் திகதிற்கு பின்னர் எவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்பது குறித்து தீர்மனிக்க அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இன்று கூடவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்