கொரோனா பரவலுக்கு பிறகு முதலாவது சீன சுற்றுலாப் பயணிகள் குழு இலங்கை வருகை!

உலகளாவிய கொரோனா தொற்றுநோய் பரவலுக்கு பிறகு, முதலாவது சீன சுற்றுலாப் பயணிகள் குழு, இலங்கை வரவுள்ளது.

கொரோனா தொற்றுக்கு பிறகு சீனாவிலிருந்து சுற்றுலா செல்லக்கூடிய முதல் 20 நாடுகளில் இலங்கையையும் சீனா பெயரிட்டுள்ளதன் பின்னணியில் இந்த வருகை அமையவுள்ளது.

குறித்த சுற்றுலாப் பயணிகளுடனான விமானம் மார்ச் 3ஆம் திகதி ஷாங்காய் புடாங் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்படவுள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டில், சீனாவிலிருந்து 280,000 சுற்றுலாப் பயணிகள் இலங்கை வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்