பொருளாதார நெருக்கடி காலத்தில் அரச அதிகாரிகள் பொறுப்புடன் செயலாற்ற வேண்டியது கடமையிலான பணியாகும்

பாறுக் ஷிஹான்
 
சட்டம் பற்றிய அறிவு எல்லோருக்கும் இருக்க வேண்டும் என்பது பொதுவான கோட்பாடாகும். சட்டம் பற்றித் தெரியாது என்பது குற்றம் சாட்டப்பட்ட ஒருவருக்கு மன்னிப்பளிக்காது. சட்டம்  எமது அன்றாட வாழ்வுடன் பின்ணிப் பிணைந்துள்ளது. தெரிந்தோ தெரியாமலோ நாளாந்தம் எமது வாழ்க்கையினை சட்டத்தின் அடிப்படைகளை அறிந்து கொண்டு நடாத்திச் செல்கிறோம். சிறுவர் தொடர்பிலான குற்றச் செயல் ஒன்றை விசாரணைக்குட்படுத்தும் போது குற்றச் செயல் புரியப்பட்ட சந்தர்ப்பமும்இ சாட்சியும் முக்கியமாகும். பொருளாதார நெருக்கடி காலத்தில் அரச அதிகாரிகள் பொறுப்புடன் செயலாற்ற வேண்டியது கடமையிலான பணியாகும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனைப் பிராந்திய மனித உரிமைகள் அதிகாரி அப்துல் அஸீஸ் தெரிவித்தார்.
சிறுவர் தொடர்பிலான உயர் மட்ட அதிகாரிகளுக்கான விசேட கூட்டம் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கல்முனை காரியாலயத்தில் இன்று  பிராந்திய மனித உரிமைகள் அதிகாரி அப்துல் அஸீஸ் தலைமையில் இடம்பெற்ற போது மேலும் கருத்துத் தெரிவிக்கும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
எமது நாட்டில் நாளுக்கு நாள் ஏறிக் கொண்டு செல்லும் அத்தியவசியப் பொருட்களின் விலையேற்றம் குடும்பத்தில் பெரிதும் பாதிப்பை ஏற்படுத்துகின்றது. பெற்றோர்கள் கடினமாக உழைத்து பிள்ளைகளை காப்பாற்ற  வேண்டும் என்ற கட்டாய தேவைக்கு ஆளாகுகின்றனர். அது மட்டுமன்றி, குடும்பச் சுமைகளை சுமக்கின்ற தாய்மார்கள் வேலைக்கு செல்லும் போது ஏற்படும் விபரீதங்கள் பற்றியும், சமுகத்தில் உள்ளவர்களின் வறுமை, கல்வியறிவின்மை போன்ற காரணங்களினால் பெற்றோர்கள் அறியாத வகையில், சிறுவர்கள் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இவ்வாறான செயல்கள் மூலமாக சிறுவர்கள் உடல், உள ரீதியான வேதனைகளை அடைகின்றனர்.
எம்மில் அனேகமானவர்களுக்கு பாலியல்  தொந்தரவானது இலங்கைச் சட்டத்தில் குற்றம் என எழுதப்பட்டுள்ள விடயம் என்னவென்பது தெரியாது என்றே கூற வேண்டும். இது பற்றி 1995ம் ஆண்டின் 22ம் இலக்க தண்டணை சட்டக் கோவை சட்டத்தின்படி, இக்குற்றம் பற்றி வறையறை செய்யப்பட்டு;ள்ளது. எனவே சிறுவர்களுக்கு எதிராக புரியப்படும் குற்றங்கள் அனைத்தும் நீதிமன்றம் மூலம் நியாயத் தீர்ப்பு வழங்குவதன் மூலமே, மக்கள் மத்தியில் நம்பிக்கையினை கட்டியெழுப்ப முடியும் என்பதையும் இதற்கு சிறுவர் தொடர்பிலான அதிகாரிகள் அவர்களது வகிபங்கினை உரிய நடபடிமுறைகளில் செய்ய வேண்டும்  என்பதையும் மனதில் கொள்ள வேண்டும்.
இன்றைய காலகட்டதில் அரச பாடசாலைகளுக்கான அனுமதி விடயத்தி;ல் பெருமளவு பணங்கள் பாடசாலை அபிவிருத்தி என்ற பெயரி;ல் பெறப்பட்டு வருவதாகவும், குறி;ப்பாக மாணவர்களுக்கான பரீட்சைக்கான அனுமதி அட்டை பாடசாலையில் கிடைக்கப்பெற்றிருந்தும் அதனை அம்மாணவர்களுக்கு வழங்காமல் மறுதலித்து வருகி;ன்ற விடயமும், புலமைப் பரிசில் பரீட்சை எழுதுகி;ன்ற மாணவர்களுக்கு பெருமளவு பணம் பிரத்தியோக வகுப்புக்காக பெறப்பட்டு இரவு நேரம் வரை வகுப்புக்கள் தொடர்வதாகவும் அதிகாரிகளினால் கூறப்பட்டது.
இது தொடர்பிலான முறைப்பாடுகள் ஆணைக்குழுவிற்கு கிடைக்கப்பெற்றால் உடனடியாக அடிப்படை உரிமை மீறலுக்கான விசாரணைகளைத் தொடர்ந்து அரச நிருவாக மற்றும் நிறைவேற்றுத் துறையினருக்கு எதிராக சிபாரிசுகள் முன்வைக்கப்படும் என  தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.