தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கோர விபத்து ஒருவர் பலி!
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கொட்டாவ பகுதியில் இடம்பெற்ற கார் விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
காலி அக்மீமன பிரதேசத்தில் வசிக்கும் இளைஞன் ஒருவரே உயிரிழந்துள்ளார்.
விபத்தில் காயமடைந்த காரில் பயணித்த ரஷ்ய பெண் ஒருவர் சிகிச்சைக்காக ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நெடுஞ்சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியின் பின்புறம் இந்த கார் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை நெடுஞ்சாலை போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
கருத்துக்களேதுமில்லை