நீதிபதிகளின் வரி குறித்து நீதிமன்றத்தின் உத்தரவு!

நீதிபதிகளின் சம்பளத்தில் வருமானம் ஈட்டும் போது வரி செலுத்துவதை தடுக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவை மார்ச் மாதம் முதலாம் திகதி வரை நீடிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (24) உத்தரவிட்டுள்ளது.

இந்த மனு இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதிபதி நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் ஏ. மரிக்கார் ஆகிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் குழு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மனுதாரர்களான நீதிபதிகள் சங்கங்கள், ஒரு சுயேச்சைக் குழுவாக இருப்பதால், அவர்களிடம் வரி வசூலிக்க உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்கு சட்டப்பூர்வ அதிகாரம் இல்லை என தெரிவித்துள்ளனர்.

எனவே அவர்களிடமிருந்து உரிய வரியை அறவிட நீதி அமைச்சு எடுத்த தீர்மானத்தை ரத்து செய்யுமாறு கோரி இந்த மனு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.