இஸ்ரேலில் தொழில் வழங்குவதாகக் கூறி பண மோசடி : குளியாபிட்டியைச் சேர்ந்தவர் கைது!

இஸ்ரேல் நாட்டில் தாதியர் தொழில் வழங்கப்படும் என்று கூறி, அரச இலட்சினை மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் போலி முத்திரைகளுடன் தயாரிக்கப்பட்ட போலி விண்ணப்பங்களை வழங்கி இளைஞர்களை தவறாக வழிநடத்தி பண மோசடியில் ஈடுபட்டார் எனக் கூறப்படும் ஒருவரை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

மேற்படி நபர் பத்தரமுல்லை தியத்த உயன வளாகத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார் எனத் தெரிவித்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம், குறித்த சந்தேக நபர் கட்டணமாக ஒருவரிடமிருந்து தலா 4 லட்சம் ரூபா பணத்தை பெற்றுள்ளார் எனவும் குறிப்பிட்டுள்ளது.

குளியாபிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் எனவும், அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது தெரியவந்த தகவலின் அடிப்படையில் அத்துரிகிரிய பிரதேசத்தை சேர்ந்த மற்றுமொருவரும் கைது செய்யப்பட்டார் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.