கிராமப்புற கடன், சமூக பாதுகாப்பு திட்டங்களில் தேசிய சபை துணைக் குழு கவனம் செலுத்துகிறது

கிராமப்புற கடன் மற்றும் சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் தொடர்பான ஸ்திரப்படுத்தல் தொடர்பான குறுகிய மற்றும் நடுத்தர கால திட்டங்களை அடையாளம் காண தேசிய சபை துணைக் குழுவில் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தலைமையில் தேசிய சபை உபகுழு பாராளுமன்றத்தில் கூடிய போது இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

இலங்கை மத்திய வங்கி, நிதி அமைச்சு, இலங்கை கொள்கை கற்கைகள் நிறுவனம் மற்றும் பிராந்திய அபிவிருத்தி வங்கி ஆகியவற்றின் பிரதிநிதிகள் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.

குறைந்த வருமானம் பெறுவோருக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்டுள்ள சமுர்த்தி வேலைத்திட்டம் உள்ளிட்ட வேலைத்திட்டங்கள் தொடர்பில் நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றது.

அதன்படி, குறைந்த வருமானம் பெறுவோருக்கு இவ்வாறான சலுகைகளை முறையாக விநியோகிப்பதற்கான வழிமுறைகளை தயாரிப்பது தொடர்பில் கலந்துகொண்ட தரப்பினர் கருத்து தெரிவித்தனர்.

சமுர்த்தி வங்கி உள்ளிட்ட கிராமிய வங்கிகளின் கடன் சலுகைகளை வழங்குவது தொடர்பிலும் இதன் போது கவனம் செலுத்தப்பட்டது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.