யாழில் மருத்துவ கழிவுகளை எரியூட்டுவது தொடர்பில் ஆராய்வு!

யாழ்ப்பாணம் கோம்பையன் மணல் இந்து மயானத்தில் மருத்துவ கழிவுகளை எரிப்பதற்கான எரியூட்டி அமைத்தல் தொடர்பில் ஆராயப்பட்டது.

கடந்த சில நாள்களாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மருத்துவ கழிவுகள் அகற்றப்படாது லொறிகளில் ஏற்றி வைத்தியசாலை வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

இது தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டது.

யாழ். போதனா வைத்தியசாலையின் மருத்துவ கழிவுகளை எரிப்பதற்கு யாழ். மாநகர சபைக்குட்பட்ட கோம்பையன் மணல் மயானப்பகுதியில் எரியூட்டி ஒன்றை அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றின் உதவியுடன் அமைத்து செயற்படுத்துவது தொடர்பில் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டிருந்த நிலையில் கோம்பையன் மணல் மயானம் இந்து மயானம் என்பதால் இந்து மயான வளாகத்துக்குள் மருத்துவக் கழிவுகளை எரியூட்டுவதா என்பதை ஆராயுமாறு வடக்கு மாகாண ஆளுநர் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் இந்த விடயம் தொடர்பில் வட மாகாண ஆளுநர் செயலகத்தில் ஆளுநரின் செயலாளர் தலைமையில் கலந்துரையாடப்பட்டது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.