தேர்தல் ஒரு அத்தியாவசியமற்ற தேவை என ஜனாதிபதி கூறுவதை ஏற்றுகொள்ள முடியாது – எம்.ஏ.சுமந்திரன்

உள்ளூராட்சி மன்ற தேர்தல் எதிர்வரும் மார்ச் 19 ஆம் திகதிக்கு முன்னர் கட்டாயமாக நடத்தப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

அவரது யாழ்ப்பாண அலுவலகத்தில் இன்று (சனிக்கிழமை) நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

விலைவாசிகள் உயர்ந்த வண்ணம் உள்ளன. விலைவாசி அதிகப்பாலும் வரி அதிகரிப்பாலும் மக்கள் மிகவும் கஷ்டப்படுகின்ற ஒரு சூழ்நிலை காணப்படுகிறது. பலருக்கு வாழ்க்கைச் செலவை சமாளிக்க முடியாத கடும் கஷ்டமான நிலை காணப்படுகின்றது.

அப்படியான சூழ்நிலையிலே இந்த உள்ளூராட்சி தேர்தல் என்கின்ற விடயத்தைப் பேசு பொருள் ஆக்கி நாட்டிலே அது தொடர்பான ஒரு சர்ச்சையை உருவாக்கி மக்களுடைய கவனத்தை அதன் பால் திருப்புவதற்காகவும் சில முயற்சிகள் நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

திசை திருப்புவதற்காக அரசாங்கம் சார்பிலும் ஜனாதிபதி சார்பிலும் முயற்சிகள் நடைபெற்றாலும் கூட தேர்தல் என்பது மிகவும் அத்தியாவசியமான ஒரு விடயம்.

ஒரு நாடு ஜனநாயக நாடா இல்லையா என்பதைத் தீர்மானிப்பது உரிய காலத்திலே தேர்தல்கள் கிராமமாக நடத்தப்படுவது முக்கியமான ஓர் அம்சமாகும். ஆகையால் நாட்டிலே பாரிய மாற்றங்கள் சென்ற வருட நடுப்பகுதியிலே இடம்பெற்றன.

தேர்தலில் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி தேர்தலில் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கமும் அதாவது ஜனாதிபதி நாட்டை விட்டு ஓடினார். பிரதமர் தானாக பதவி விலகினாலும் கூட தங்களுடைய நாடாளுமன்றத்தில் இருந்தவர்கள் ஆட்சியை தொடர்ந்து வருவதோடு நாட்டை ஆட்டிப் படைக்கின்ற ஒரு சூழ்நிலை காணப்படுகின்றது.- எனத் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.