சுதந்திர கட்சி பொதுச் செயலாளர் பதவியிலிருந்து தன்னை நீக்க சதி என்கிறார் தயாசிறி ஜயசேகர!

சுதந்திரக் கட்சியிலிருந்து விலகியவர்கள் தனக்கு எதிராக சதி செய்து வருகின்றனர் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளரான நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

பொதுச்செயலாளரை பதவியில் இருந்து என்னை நீக்கினால்தான், தாம் கட்சிக்கு வருவோம் என ஒழுக்காற்று குற்றச்சாட்டின் பேரில் ஏற்கனவே கட்சியிலிருந்து நீக்கப்பட்ட குழுவினர் தெரிவித்து வருகின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான சதிகள் அனைத்தையும் தாம் ஐந்து சதத்துக்கும் கணக்கெடுக்கவில்லை எனவும் தம்மை கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்குமாறு இவர்கள் கட்சிக்கு முன்மொழிந்துள்ளனர் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர கூறியுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்