கொழும்பில் ஆர்ப்பாட்டத்தில் அமைதியின்மை ! 20 பேர் வைத்தியசாலையில்

கொழும்பில் தேசிய மக்கள் படை நடத்திய ஆர்ப்பாட்டத்தை கலைப்பதற்கு பொலிஸார் மேற்கொண்ட கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகங்களில் பலர் காயமடைந்துள்ளள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு காயமடைந்தவர்களில் 20 பேர் சிகிச்சைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உள்ளுராட்சிமன்றத் தேர்தலை விரைவாக நடத்துமாறு வலியுறுத்தி தேசிய மக்கள் சக்தியினர் இன்று விகாரமாதேவி பூங்கா தொடக்கம் நகர மண்டப சுற்றுவட்டம் வரை பேரணியாக சென்று எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், போராட்டகாரர்கள் மீது பொலிஸார் கண்ணீர்புகை, நீர்த்தாரை பிரயோகங்களை மேற்கொண்டு போராட்டத்தை கலைத்தனர்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்