முல்லைத்தீவு உடையார்கட்டு மகா வித்தியாலய மாணவர்களுக்கான புத்தகப்பை,பாதணிகள் வழங்கி வைப்பு….

முல்லைத்தீவு /உடையார் கட்டு மகா வித்தியாலயத்தில் 157 மாணவர்களுக்கு புத்தகப்பை மற்றும் பாதணிகள் வழங்கும் நிகழ்வானது 26/02/2023 இன்றைய தினம் பாடசாலையின் அதிபர் திரு. விநாசித்தம்பி ஸ்ரீதரன் தலைமையின் காலை 10.30 மணியளவில் இடம்பெற்றது.

முல்லைத்தீவு உடையார் கட்டு மகாவித்தியாலயம், முல்லைத்தீவு/உடையார் அரசினர் தமிழ் கழவன் பாடசாலை, முல்லைத்தீவு /முங்கிளாறு ஆரம்ப பாடசாலை,
முல்லைத்தீவு /குரவில் தமிழ் வித்தியாலயம்
ஆகிய நான்கு பாடசாலையில் இருந்து 157 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இன் நிகழ்வில் முல்லைத்தீவு பிரதேச கோட்டக் கல்வி அதிகாரி, பாடசாலையின் அதிபர்களாகிய திருமதி. செல்வரஞ்ஞனி, பொன்னம்பலம், திரு. தெய்வேந்திரன் மங்கள லேஸ்வரன், இருட்டு மடு வித்தியால அதிபர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் இணைந்த கரங்கள் அமைப்பின் உறுப்பினர்களான லோ. கஜரூபன், எஸ்.காந்தன்,சி. துலக்சன், மா. ஜெகநாதன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கான புத்தகப்பை மற்றும் பாதணிகள் வழங்கி வைக்கப்பட்டது.
இவ் மாணவர்களுக்கு 400,000 ரூபாய்க்கு மேற்பட்ட தொகை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைத்தமை குறிப்பிடதக்கது.

இதற்கு முற்று முழுதான நிதிப்பங்களிப்பினை ஜனார்த் நரேந்திரன், அனு கோகுலன், ராஜ்குமார். ஜனகரன் அவர்கள் இம் மாணவர்களுக்கான புத்தகப்பை மற்றும் பாதணிகள் வழங்குவதற்கு அனுசரணை வழங்கியமை குறிப்பிடதக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.