வசந்த முதலிகே உள்ளிட்ட 57 பேர் இன்று நீதிமன்றில் முன்னிலை

கல்வி அமைச்சுக்குள் பிரவேசித்து அமைதியின்மையை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டுள்ள அனைத்து பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே உள்ளிட்ட 57 பேர் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

அவர்கள் கடந்த 24ஆம் திகதி கடுவலை பதில் நீதவான் சுஜீவ குணதிலக்க முன்னிலையில் விசாரணைக்கு அழைக்கப்பட்ட போது, அவர்களை இன்றைய தினம் வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

கடந்த 23ஆம் திகதி கல்வி அமைச்சுக்குள் அத்துமீறி பிரவேசித்து பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் அனைத்து பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே உட்பட 57 பேர் கைது செய்யப்பட்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்