ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்!

(அந்துவன்)

 

மின்சாரக் கட்டண அதிகரிப்பு, அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம், மக்கள் மீது திணிக்கப்பட்டுள்ள வரிச் சுமை அதிகரிப்பு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளை கண்டித்தும் நுவரெலியா – கந்தப்பளை நகர மத்தியில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

நேற்று (26) காலை முன்னெடுக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தை கந்தப்பளை பிரதேச பொதுமக்களுடன் இணைந்து, சமூக நீதிக்கான மலையக வெகுஜன அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது.

இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் தமது கோரிக்கைகள், எதிர்ப்புகளை பதாகைகளை ஏந்தியவாறு வெளிப்படுத்தி, கறுப்பு கொடிகளை பறக்கவிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.