புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியின் அம்பாறை மாவட்டத்திற்கான நிருவாகக் கட்டமைப்பு…

(சுமன்)

புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியின் அம்பாறை மாவட்டத்திற்கான நிருவாகக் கட்டமைப்பு கட்சியின் தலைவர் கந்;தசாமி இன்பராசா தலைமையில் நேற்றைய தினம் காரைதீவில் இடம்பெற்றது.

இக்கூட்டத்தில் எதிர்வரும் உள்ளுராட்சித் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் காரைதீவு பிரதேச சபையில் போட்டியிடும் வேட்பாளர்கள், கட்சி ஆதரவாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இத்தெரிவில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர், மாவட்டச் செயலாளர்;, முன்னாள் போராளிகள் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர், இளைஞர் அணி ஒருங்கிணைப்பாளர், மகளிர் அணித் தலைவி போன்ற முக்கிய பதவிகளுக்குப் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்.

இதன்படி புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியின் அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்பாளராக செல்வராசா ரசிகரன், மாவட்ட செயலாளராக நமசிவாயம் சதாசிவம், பொருளாளராக இரத்தினம் கோகுலநாதன், உபதலைவராக சின்னத்தம்பி பிரேமா, அம்பாறை மாவட்ட மகளிர் அணித் தலைவியாக சண்முகம் சத்தியகலா, இளைஞர் அணி ஒருங்கிணைப்பாளராக யோகராஜா விஜயன் போன்றோர் தெரிவு செய்யப்பட்டதுடன், இளைஞர் அணி, மகளிர் அணி, முன்னாள் போராளிகள் ஒருங்கிணைப்புக் குழு போன்றவற்றுக்கான உறுப்பினர்களும் நியமிக்கப்பட்டிருந்தனர்.

இதன்போது அம்பாறை மாவட்டத்தில் தமிழர் பிரதேசங்களில் முன்னெடுக்கப்பட வேண்டிய  தமிழ் மக்களின் வாழ்வாதாரத்தினை நிலைப்படுத்தக் கூடிய செயற்திட்டங்கள் தெடர்பிலும் ஆராயப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்