விவசாயிகளை யானைகளிடமிருந்து பாதுகாக்க கோரிக்கை -சம்மாந்துறை அனைத்து விவசாய அமைப்பின் தலைவர் நௌஷாட்

பாறுக் ஷிஹான்
உணவு பாதுகாப்பை உறுதிப்படுத்த முயலும் அரசு உற்பத்தியையும் விவசாயிகளையும் யானைகளிடமிருந்து பாதுகாக்க தவறுகின்றனர் என சம்மாந்துறை அனைத்து விவசாய அமைப்பின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் பிரதேச சபை தவிசாளருமான ஏ.எம்.முஹம்மட் நௌஷாட்  தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்,
சம்மாந்துறை பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பிரதேசத்தில் 24 ஆயிரம் ஏக்கர் நெற்செய்கை செய்யப்படடுள்ளதுடன் ஏறத்தாள நான்கு வருடங்களாக விவசாய அமைப்புகள் அனைத்து விவசாய அமைப்புகளும் ஒன்று சேர்த்து விவசாயிகளிடமிருந்து 20 இலட்சத்திற்கும் மேற்பட்ட பணம் அறவீட்டு யானைகளிடமிருந்து உற்பத்தியை பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டுவந்து இருக்கின்றனர்.
இருந்தும் கால அரசாங்கத்திடமிருந்து இந்த முயற்சிக்கு ஆயிதம் தாங்கிய சிவில் பாதுகாப்பு படையினரை தந்து உதவுமாறு வேண்டுகொள் விடுத்தும் அது கைகூடவில்லை இதனால் ஒவ்வொறு போகமும் அப்பாவி விவசாயிகளின் உயிர் இழப்புக்கள் நிகழ்ந்து வருகின்றது. இதன் போது சென்ற கிழமை ஒரு விவசாயின் உயிர் இழப்பின் போது வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் நடவடிக்கையில் இறங்கியும் யானைகளை கட்டுப்பாடுக்குள் கொண்டுவர முடியாமல் போனது.
தற்போது அறுவடை இறுதிக்கட்டத்தில் இருக்கும் போது நாளாந்தம் நுற்றுக்கணக்கான யானைகள் சம்மாந்துறை விவசாயிகளின் உற்பத்தியையும், உயிருக்கும் அச்சுருத்தலாக உள்ளது. இதற்கு உடனடியாக தீர்வு காணும் படி ஜனாதிபதிடம் வேண்டுகொள் விடுத்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.