அம்பலாங்கொடை துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி!

ம்பலாங்கொடை, குளீகொட, மீட்டியகொட வீதியில் கொன்னதுவ பிரதேசத்தில் இன்று (28) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மாதம்பாகம, உஸ்முதுல்லாவ பகுதியைச் சேர்ந்த 42 வயதான சுதத் சிறி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இறந்தவர் தனது மனைவியை அவர் பணிபுரியும் அலுவலகத்தில் இறக்கிவிட்டு வீடு திரும்பும் போதே துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகியுள்ளார்.

துப்பாக்கிச் சூடு நடத்தியவர் குறித்தோ, துப்பாக்கிச் சூடு நடத்தியவர் வந்த வாகனம் குறித்தோ இதுவரை எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.

துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த நபர் பலப்பிட்டிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது உயிரிழந்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.