டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

கொழும்பு மாவட்டத்தில் தெஹிவளை, பிலியந்தலை, இரத்மாலானை, கொத்தட்டுவ, மகரகம போன்ற பிரதேசங்களில் அதிக டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சமூக வைத்திய நிபுணர், வைத்தியர் இந்திக்க வீரசிங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை புத்தளம், கம்பஹா மற்றும் கொழும்பு ஆகிய மாவட்டங்களில் இந்நாட்களில் அதிக டெங்கு நோயார்கள் பதிவாகுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த வருடத்தில் மாத்திரம் 11184 பேர் டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.