வவுனியா போராட்டம் மக்களின் ஓத்துழைப்பின்மையால் கைவிடப்பட்டது!

வவுனியா வைத்தியசாலையின் கழிவுகள் ஓமந்தை வைத்தியசாலையின் பின்புறமாஎரியூட்டும் நிலையமூடாக எரிக்கப்படுவதற்கு எதிராக நேற்று (திங்கட்கிழமை) மேற்கொள்ளப்படவிருந்த போராட்டம் கைவிடப்பட்டது.

வவுனியா வைத்தியசாலை கழிவுகள் ஓமந்தை ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு பின்புறமாகவுள்ள அதற்கென அமைக்கப்பட்ட எரியூட்டும் நிலையத்தில் சுமார் 6 வருடங்களாக எரியூட்டப்பட்டு வருகின்றது.

இந் நிலையில் சில சமூக ஆர்வலர்கள், அரசியல் பிரதிநிதிகள் இணைந்து மேற்படி எரியூட்டல் நிலையத்தால் அருகில் உள்ள ஓமந்தை மத்திய கல்லூரி மாணவர்கள் மற்றும் அந்தப் பிரதேசத்தவர்களுக்கு ஆபத்து எனத் தெரிவித்து நேற்று காலை ஆர்ப்பாட்டமொன்று மேற்கொள்ள திட்டமிட்டிருந்தனர்.

இதற்கு ஆதரவாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், வினோ நோகராதலிங்கம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் உட்பட சிலர் சம்பவ இடத்தில் பிரசன்னமாகியிருந்தனர்.

எனினும் கிராம மக்களின் ஓத்துழைப்பின்மையாலும் பாடசாலை சமூகத்தின் ஒத்துழைப்பின்மையாலும் மக்கள் வருகை தராத நிலையில் அரசியல்வாதிகள் திரும்பி சென்றனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்