யாழ் நெடுங்குளம் சந்தியில் வாகன விபத்து!

யாழ் நெடுங்குளம் சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் காயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து இன்று பிற்பகலில்(28) இடம் பெற்றுள்ளது.

சாவகச்சேரியில் இருந்து யாழ்ப்பாண நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும், யாழிலிருந்து நெடுங்குளம் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளுமே மோதுண்டு விபத்துநேர்ந்துள்ளது.

சம்பவத்தில் காயம் அடைந்த இருவரும் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிகா விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்