வடக்குமாகாண ஆளுநர் செயலகம் முன்றலில் வர்த்தக சந்தை ஆரம்பிக்கப்பட்டது.
வடக்குமாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில் வடக்குமாகாணத்தில் உள்ள சிறுதொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் முகமாக வர்த்தக சந்தை இன்று ஆரம்பிக்கப்பட்டது.
வடக்குமாகாண ஆளுநர் செயலகம் முன்றலில் இவ் வர்தக சந்தை இடம்பெற்றது.
இதன்போது வடக்குமாகாண சிறுதொழில் முயற்சியாளர்களின் உள்ளூர் உற்பத்திப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது.
குறித்த உள்ளூர் உற்பத்திப் பொருட்கள் தரமானவையாகவும் மலிவான விலையிலும் காணப்படுவதால் மக்கள் ஆர்வமாக அப்பொருட்களை கொள்முதல் செய்தனர்.
மேலும் இவ் வர்தக சந்தையினை வடக்குமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா பார்வையிட்டு பொருட்களையும் கொள்முதல் செய்தார்.
இதன் பின் ஊடகங்களுக்கு அவர் கருத்து தெரிவிக்கையில் “உள்ளூர் உற்பத்திப் பொருட்களை கொழும்பிற்கு ஏற்றுமதி செய்வதற்கான ஒழுங்குகள் செய்துகொடுக்கப்படும். மேலும் யாழ்பாணம் சர்வதேச விமான நிலையத்திலும் யாழ்ப்பாண உள்ளூர் உற்பத்தியாளர்கள் தமது விற்பனைகளை மேற்கொள்வதற்கு பிரத்தியோக இடம் ஒதுக்கி கொடுக்கப்படும் என தெரிவித்தார்.













கருத்துக்களேதுமில்லை