தொழிற்சங்கத் தலைவர்கள் பயணம் செய்ய எரிபொருள் வழங்குவது ஜனாதிபதியே! வஜிர அபேவர்தன

போராட்டங்களை நடத்துவதற்காக தொழிற்சங்க தலைவர்கள் பயணங்களை மேற்கொள்ளத் தேவையான எரிபொருள்களை ஜனாதிபதியே வழங்குகிறார் என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

நாட்டில் நிலவி வந்த வரிசைகளை இல்லாதொழித்து, போக்குவரத்து செய்ய ஜனாதிபதி எரிபொருள் வழங்கியுள்ளார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எரிபொருள் வரிசை, எரிவாயு வரிசை போன்றே உர வகைகள் இன்றி விவசாயிகள் அவதியுற்றிருந்த – நாடு அராஜக நிலையில் இருந்த காலத்தில் – சிலர் பிரச்சினைகளிலிருந்து தப்பிச்சென்ற போது அந்த சவால்களை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பெற்றோல், டீசல், எரிவாயு, மண்ணெண்ணெய், பால் மா உள்ளிட்ட பொருள்களுக்கான தட்டுப்பாட்டு நிலையை நீக்கிய ஜனாதிபதி ஓரளவு பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்கியுள்ளார் என அவர் தெரிவித்துள்ளார்.

நாடு ஓரளவு வழமைக்குத் திரும்பிக் கொண்டிருக்கும் தருணத்தில் இவ்வாறான போராட்டங்கள் நடத்துகின்றமை, சுற்றுலாப் பயணிகளைப் பாதிக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சர்வதேசத்தின் தேவைகளுக்கு ஏற்ற வகையில் இந்தப் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன என அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் நடவடிக்கைகளை விமர்சனம் செய்பவர்கள் மாற்று வழிகளைப் பரிந்துரை செய்ய முடியும் என வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.