இலங்கை திரும்பிய பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர்!

வெளிநாட்டில் இருந்த பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தற்போது இலங்கை திரும்பியுள்ளார் எனத் தெரியவருகிறது.

அவர் நேற்று (செவ்வாய்க்கிழமை) தனது அலுவலகத்துக்கு வந்தார் எனவும் , சீல் வைக்கப்பட்டுள்ளமையால் உள்ளே செல்ல முடியாத நிலையேற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும், பெரும்பான்மையான பொதுமக்களை ஒடுக்கும் வகையில் உள்ள மின்கட்டண உயர்வைத் தொடர்ந்தும் எதிர்த்து போராட முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளா்.

மேலும் தனது தனிப்பட்ட பணத்தில் பணிகளை மேற்கொள்ள முடிவு செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்