தமிழ் அரசியல் கைதியின் விடுதலைக்கு விஜயகலா சிவப்பு கொடி..

முன்னாள் இராஜாங்ம அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் பிடிவாதம்  காரணமாக அரசியல் கைதி ஒருவரை விடுதலை செய்ய முடியாத நிலை காணப்படுவதாக உயர் மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னாள் இந்து கலாசார அமைச்சர் மகேஸ்வரன் கடந்த 2008 ஆண்டு புத்தாண்டு தினத்தில் பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலயத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இதன்போது, மகேஸ்வரனின் பாதுகாவலரின் துப்பாக்கி சூட்டில் காயமடைந்த கொலையாளி கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தினால் குற்றவாளி என்பது உறுதிப்படுத்தப்பட்டு தண்டனையும் வழங்கப்பட்டுள்ளதுடன், குறித்த நபர் புலிகள் இயக்க உறுப்பினர் என்பதும் விசாரணைகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டது.

தற்போது அரசியல் கைதிகளை விடுவிக்கும் முயற்சிகள் தற்போதைய அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில்,

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கொலை முயற்சியில் தொடர்புடையவரையும், மகேஸ்வரன் கொலை குற்றவாளியையும், பாதிக்கப்பட்டவர்களின் ஆட்சேபனை இல்லாத பட்சத்தில் விடுதலை செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

பீல்ட் மாஷல் சரத் பொன்சேகா ஏற்கனவே தனது ஆட்சேபமின்மையை அறிவித்துள்ள போதிலும், குறித்த கொலை குற்றவாளி விடுதலை செய்யப்படக் கூடாது என்பதில் விஜயகலா மகேஸ்வரன் இறுக்கமாக இருப்பதாக சொல்லப்படுகிறது.

அதேவேளை, உண்மையை அறிந்திருந்த போதிலும் அரசியல் நலன்களுக்காக தனது கணவர் மகேஸ்வரனை புலிகள் கொலை செய்தமையை மறைத்து வந்த விஜயகலா,

தற்போது தன்னுடைய நிலைப்பாட்டினை மாற்றி மகேஸ்வனின் கொலையுடன் தமிழ் தேசியப் பரப்பில் தற்போது தன்னை இணைத்துள்ள அமைப்பு ஒன்று சம்மந்தப்பட்டிருக்கலாம் எனவும், அல்லது அப்போதைய அரசாங்கத்தின் பாதுகாப்பு தரப்பினர் புலிகளின் தலைமைக்கு பணத்தை கொடுத்து கொலை செய்ய துாண்டி இருக்க முடியும் எனவும் தனக்கு நெருக்கமானவர்களுக்கு தெரிவித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.