மட்டக்களப்பிலிருந்து கொழும்பு செல்லும் புகையிரதத்தில் உள்ள சிற்றுண்டியில் திடீர் சோதனை

மட்டக்களப்பிலிருந்து கொழும்பு செல்லும் ரயிலிலுள்ள சிற்றுண்டிசாலைக்கு எதிராக பொதுச்சுகாதார பரிசோதகர்களால் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கிச்செல்ல மட்டக்களப்பு ரயில் நிலையத்தில் தரித்துநின்ற ரயிலில் உள்ள சிற்றுண்டிசாலை பொதுச்சுகாதார பிரிவினரால் நேற்று (புதன்கிழமை) மாலை திடீர் சோதனையிடப்பட்டது.

இதன்போது அங்கு மனித பாவனைக்கு உதவாத வகையில் கரப்பான், எறும்புகளுடன் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த உணவுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

அத்துடன் மேற்படி சிற்றுண்டிசாலை நடத்தியவருக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக பொதுச்சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.

கோட்டைமுனைப் பிரதேச பொதுச்சுகாதார பரிசோதகர் மிதுன்ராஜ் தலைமையில் பொதுச்சுகாதார பரிசோதகர்களான கிஷான், அமிர்தாப் ஆகியோர் இந்த சோதனை நடவடிக்கையை மேற்கொண்டனர்.

மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கிச் செல்லும் ரயிலில் காணப்படும் சிற்றுண்டிசாலை தொடர்பாகப் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்