நல்லூரில் வாள் வெட்டு – பிரதான சந்தேகநபர் கைது!

சிவராத்திரி தினத்தன்று நல்லூர் பின் வீதியில் இடம் பெற்ற வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய 27 வயதுடைய பிரதான சந்தேகநபர் யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த பதினெட்டாம் திகதி மகாசிவராத்திரி தினத்தன்று அதிகாலை வேளை நல்லூர் பின் வீதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் தலைமறைவாகி இருந்த நிலையில் நேற்றைய தினம் புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவரிடம் இருந்து தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட வாளும் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த வாள் வெட்டு சம்பவம் தொடர்பில் ஏற்கனவே மூவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் பிரதான சந்தான நபர் நேற்றைய  தினம் கைது செய்யப்பட்டுள்ளார்,

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்