பொலன்னறுவை விவசாயிகள் ஜனாதிபதிக்கு பாராட்டு

பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் விவசாயிகளுக்குத் தேவையான உரங்களை உரிய நேரத்தில் வழங்கிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு, பொலன்னறுவை விவசாயிகள் தமது நன்றியைத் தெரிவித்தனர்.

பொலன்னறுவை மின்னேரிய பிரதேசத்தில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற வைபவமொன்றில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினை சந்தித்த பொலன்னறுவை மாவட்ட விவசாய அமைப்பின் தலைவர் ஆனந்த ராஜபக்ஷ உள்ளிட்ட விவசாயிகள் ஜனாதிபதிக்கு தமது சங்கத்தின் பாராட்டுக்களைத் தெரிவித்தனர்.

விவசாயிகளுக்காக ஆற்றிய பணியைப் பாராட்டி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு “ரன் வீ கரல” (தங்க நெற்கதிர்) என்ற பெயரிலான பரிசும் இங்கு வழங்கப்பட்டது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.