வடக்கு ஆளுநரை சந்தித்த பிரித்தானிய அதிகாரி

யாழ்ப்பாணத்துக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள பிரித்தானிய வெளிவிவகார துணை பணிப்பாளர் மாயா சிவஞானம், வடக்கில் பல்வேறு அமைப்புகள், சிவில் பிரதிநிதிகள் மற்றும் அரசியல் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில் வடக்கு ஆளுநர் ஜீவன் தியாகராஜாவுடன் கலந்துரையாடல் ஒன்றை முன்னெடுத்துள்ளார்.

இதன்போது வடக்கின் பொருளாதார மற்றும் அபிவிருத்தி நகர்வுகள் தொடர்பாகக் கலந்துரையாடப்பட்டுள்ளது.

குறிப்பாக யுத்தத்துக்குப் பின்னரான வடக்கின் அபிவிருத்தியில் அரசாங்கங்களின் பங்களிப்புகள் மற்றும் பிரித்தானிய அரசாங்கம் தொடர்ச்சியாக முன்னெடுத்துவரும் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

மேலும் வடக்கின் நல்லிணக்க வேலைத்திட்டங்கள் பற்றியும் முக்கிய கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

போரால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகள் மற்றும் அவர்களின் வாழ்வாதாரத்தை ஊக்குவிக்க அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகள் தொடர்பாகவும் ஆளுநர் தெளிவுபடுத்தியுள்ள நிலையில், வடக்கு மக்களின் நல்லிணக்க நகர்வுகளில் சர்வதேசத்தின் பங்களிப்பு தொடர்பாகவும் பிரித்தானிய வெளிவிவகார துணை பணிப்பாளர் மாயா சிவஞானம் எடுத்துரைத்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.