சிறைச்சாலை ஊடகப்பேச்சாளர் வீட்டிலும் திருடர்கள் கைவரிசை!

சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்கவின் அதிகாரபூர்வ இல்லத்தில் திருட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

சுமார் ஏழு லட்சம் ரூபா பெறுமதியான தங்க ஆபரணங்கள் திருடப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவம் தொடர்பில் பொரளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

மகசீன் சிறைச்சாலை வளாகத்தில் இந்த அதிகாரபூர்வ இல்லம் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சிறைச்சாலை திணைக்கள ஊடகப் பேச்சாளர் சந்தனவின் மனைவியினால் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதிகாரபூர்வ இல்லத்தை சுத்தம் செய்வதற்கு சிறைக் கைதிகள் ஈடுபடுத்தப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவம் தொடர்பில் பொரளை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்