ஓசியில் பெற்றோல் அடித்த பொலிஸ் அதிகாரி மாட்டுப்பட்டதால் பதவி இறக்கம் கிடைத்தது!

பொலிஸ் நிலையம் ஒன்றின் பொறுப்பதிகாரி ஒருவர், தனது தனிப்பட்ட காருக்கு எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருந்து இலவசமாக எரிபொருளையும் வீட்டுக்கு உயர்தர ஹோட்டல்களிலிருந்து உணவுப் பொருள்களையும் பலாத்காரமாக பெற்றுச் செல்வது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டமை தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன என பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, மேற்படி பொலிஸ் அதிகாரியை பொலிஸ் பொறுப்பதிகாரி பொறுப்பிலிருந்து இடைநிறுத்தி வெள்ளிக்கிழமை முதல் கொழும்பிலிருந்து வெகு தொலைவில் உள்ள பொலிஸ் பிரிவு ஒன்றுக்கு சாதாரண கடமைகளுக்கு நியமிக்கப்பட்டார் எனவும் பொலிஸ் வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

பிரதான பொலிஸ் பரிசோதகரான இவர், சில மாதங்களுக்கு முன்னரே பொலிஸ் நிலையம் ஒன்றின் பொறுப்பதிகாரியாக பதவி உயர்வு பெற்றுள்ளார் எனவும் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்