வவுனியா வைத்தியசாலையில் பல்வேறு கோரிக்கைகள முன்வைத்து ஊழியர்கள் போராட்டம்

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை சிற்றூளியர்கள் பல்வேறு கோரிக்கைளை முன்வைத்து இன்று (03) மதியம் 12.30 மணியளவில் வைத்தியசாலை நுழைவாயில் முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் முறையற்ற வரி அதிகரிப்பை நிறுத்து , முறையற்ற நியமனத்தினை வழங்குவதை நிறுத்து , வாழ்வாதாரத்தினை அதிகரி , வங்கியில் அதிகரித்த வட்டி வீதத்தினை குறை , ஊழியர் பற்றாக்குறையினை உடன் நிவர்த்தி செய் போன்ற பல்வேறு வாசகங்களை தாங்கிய பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

வைத்தியசாலை சிற்றூளியர்கள் மதியம் 12.00 மணி தொடக்கம் 1.00 மணி வரை கடமையிலிருந்து விலகி குறித்த போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்