மகனின் மரண செய்தி கேட்டு அதிர்ச்சியில் உயிரிழந்த தாய்

வவுனியாவில் மகனின் மரண செய்தி கேட்டு அதிர்ச்சியில் தாய் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வவுனியா – நெடுங்கேணி பகுதியில் மாட்டுடன் மோதுண்டு படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நபர் உயிரிழந்துள்ளார்.

இதன்போது இராசரட்ணம் கனகராஜா என்ற 43 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இந்த மரண செய்தியை அறிந்த தாயாரான இராசரட்ணம் வீரம்மா என்ற 82 வயதுடைய முதியவரும் அதிர்ச்சியில் உயிரிழந்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து உயிரிழந்த இருவரது மரண சடங்குகளும் கிளிநொச்சி மயில்வாகனபுரம் பகுதியில் இடம்பெற்றது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.