ரோட்டரிக் கழகத்தின் ஏற்பாட்டில் சதுரங்க சுற்றுப்போட்டி.
சாவகச்சேரி
சுன்னாகம் பாரம்பரிய ரோட்டரிக் கழகத்தின் ஏற்பாட்டில் 25/02 சனிக்கிழமை சுன்னாகம் இராமநாதன் கல்லூரியில் மாணவர்களுக்கான சதுரங்க சுற்றுப்போட்டி நடத்தப்பட்டது.
குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக இலங்கை மற்றும் மாலைதீவிற்கான உதவி மாவட்ட ஆளுநர் ரோட்டரியன் ஜெயக்குமாரன் அவர்கள் கலந்து கொண்டு சுற்றுப்போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களைக் கௌரவித்திருந்தார்.
மேலும் நிகழ்வில் சுன்னாகம் இராமநாதன் கல்லூரி அதிபர் திருமதி அம்பிகா சிவஞானம்,ரோட்டரிக் கழக உறுப்பினர்கள்,பாடசாலை மாணவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.



கருத்துக்களேதுமில்லை