வவுனியாவின் முதல் பாடசாலையில் இல்ல மெய்வல்லுனர் போட்டி
வவுனியா மாவட்டத்தின் முதல் பாடசாலையான இலங்கை திருச்சபை தமிழ்க் கலவன் பாடசாலையின்(CCTMS) 2023ம் ஆண்டிற்கான இல்ல மெய்வல்லுனர் இறுதிப் போட்டிகள் (02.03. 2023) அன்றுபாடசாலை வளாகத்தில் பிற்பகல் 2.30 மணிக்கு பாடசாலையின் முதல்வர் அரிபூரணநாதன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இவ் நிகழ்வின் பிரதம விருந்தினராக ,பாடசாலையின் பழைய மாணவரும் வவுனியாவின் பிரபல சட்டத்தரணியுமான அருனகிரிநாதன் திலீப்காந்தன் அவர்கள் கலந்து கொண்டிருந்தார்
மேலும் சிறப்பு விருந்தினராக உதவிக்கல்வி பணிப்பாளர் (உடற்கல்வி) செந்தில்குமரன் அவர்களும் கெளரவ விருந்தினர்களாக ஆசிரிய ஆலோசகர் (உடற்கல்வி) யூட் பரதமாறன், பாடசாலையின் அபிவிருத்திக்குழு செயலாளர் றொபேர்ட் அவர்களுடன் உபசெயலாளர் டினேஷ் ரொஷின்டன் ஆகியோருடன் பாடசாலையின் பழைய மாணவர் சங்க செயலாளர் ப.கார்த்தீபன், நிர்வாக உறுப்பினர் தினேஸ் ஆகியோரும் கலந்து கொண்டிருந்ததுடன் குடியிருப்பு சித்திவிநாயகர் ஆலய குருக்கள் கணேஸ் ஐயா அவர்களும் அங்கிலிக்கன் திருச்சபை மதகுரு ஜோசுவா சத்தீஸ் கிறிஸ்பஸ் அவர்களும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்திருந்தனர்
இன் நிகழ்வில் இலங்கையின் தேசிய கீதம் பாடசாலை மாணவிகளால் தமிழில் பாடப்பட்டமையுடனும் தேசிய கொடி மற்றும் பாடசாலை கொடி என்பன ஏற்றப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகியிருந்தது
இறுதியாக பீஷ்மர் இல்லம் (மஞ்சள்) 3ம் இடத்தையும் , துரோணர் இல்லம் (சிவப்பு) 2ம் இடத்தையும், விதுரர் இல்லம் (பச்சை) 1ம் இடத்தையும் பெற்றுக்கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை