இலங்கை புற்றுநோய் சங்க மட்டக்களப்பு கிளையின் ஏற்பாட்டில் புற்றுநோய்க்கு எதிரான விழிப்புணர்வு நடைபவணி…

(சுமன்)

இலங்கை புற்றுநோய் சங்கம் மட்டக்களப்பு கிளையின் ஏற்பாட்டில் “புற்றுநோய்க்கு எதிராக அனைவரும் ஒன்றிணைவோம்” என்ற தொனிப்பொருளிலான விழிப்புணர்வு நடைபவணி புற்றுநோய்ச் சங்கத்தின் மட்டக்களப்பு கிளைத் தலைவர் கிழக்குப் பல்கலைக்கழக பிரதி உபவேந்தர் வைத்திய கலாநிதி கே.ஈ.கருணாகரன் தலைமையில் இன்றைய தினம் இடம்பெற்றது.

மட்டக்களப்பு கல்லடிப் பலத்திற்கு அருகிலுள்ள மைதானத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட நடைபவணியானது பிரதான வீதியூடாக மட்டக்களப்பு காந்திப் பூங்கா வரை வந்தடைந்து அங்கு விழிப்புணர்வுக் கருத்துக்கள் இடம்பெற்றன.

நடைபவணியின் போது புற்றுநோயைத் தடுப்பதற்கான வழிமுறைகள், புற்றுநோயில் இருந்து பாதுகாப்பதற்கான ஆலோசனைகள், புற்றுநோய்க்கான அறிகுறிகள் போன்றன தொடர்பில் தெளிவுபடுத்தப்பட்டதுடன், அது தெடர்பிலான பதாதைகளும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

இலங்கைப் புற்றுநோய்ச் சங்கத்தின் பிரதான ஏற்பாட்டில் இடம்பெற்ற இப்பேரணியில் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை, கிழக்குப் பல்கலைக்கழக வைத்திய பீடம், மட்டக்களப்பு ரோட்டரிக் கழகம், லயன்ஸ் கழகம், மட்டக்களப்பு நகர் பாடசாலைகளின் மாணவர்கள் எனப் பலரின் ஆதரவும் வழங்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.