ஜனாதிபதி செயலகத்தின் மலையக கல்வி பிரிவுக்கு இருவர் நியமனம்!

னாதிபதி செயலகத்தின் மலையக கல்வி பிரிவின் மேற்பார்வை பொறுப்பாளராக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதி தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கணபதி கனகராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன், தொழிற்சங்க பிரிவின் பொறுப்பாளராக மத்திய மாகாண சபையின் முன்னாள் தலைவர் மதியுகராஜாவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

மலையக பாடசாலைகளின் கல்வி அபிவிருத்திக்கும், ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் நடைமுறை பிரச்சினைகளை இனங்கண்டு, அவற்றுக்கு தீர்வு காண்பதற்கும், தொழிற்சங்க ரீதியாக பெருந்தோட்ட தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கும் இந்நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.